தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆ.கோபண்ணா எழுதிய “மாமனிதர் நேரு” நூல் வெளியீட்டு விழாவில் ராகுலின் பேச்சுகளும் ஒற்றுமை பாத யாத்திரையும் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி வருவதாக பேசியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் பேசுகையில், மாமன்னன் நேரு நூலை எழுதிய ஆ.கோபண்ணா பற்றியும் அவருடன் திராவிட கழகத்திற்கு இருக்கும் நெருங்கிய உறவையும் பற்றி பேசினார். அதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் நேரு அவர்களையும், நேரு தமிழ் நாட்டிற்காக செய்த பல னால திட்டங்களை குறித்து விவரித்தார். அதனை தொடர்ந்து பேசிய முதல்வர், ராகுல் காந்தி மற்றும் அவரின் ஒற்றுமை யாத்திரை பயணத்தை பற்றி பேசினார்.
அதில், இந்தியா ஒற்றுமை பயணத்தால், ராகுல் காந்தியின் பேச்சுகளும் இந்தியா முழுவதும் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறது, மேலும் பேசிய முதல்வர், ராகுல் காந்தியின் பேச்சுக்கள் சில சமயங்களில் நேரு பேசுவதை போன்று இருக்கிறது என்றும் கோட்சேவின் வாரிசுகளுக்கு காந்தி மற்றும் நேருவின் வாரிசுகள் பேசுவது கசக்கத்தான் செய்யும் என்று பேசியுள்ளார்.