விஜயின் அடுத்த படமான தளபதி 67 படத்திற்கு தற்போதிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. மேலும், அந்த படத்தில் பிரபல நடிகர் மன்சூர் அலிகான் நடிக்க இருப்பதாகவும் பல தகவல்கள் பரவி வந்த நிலையில் ம் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மன்சூர் அலிகான் தளபதி 67ல் நடிக்க போறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்தார்.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தின் பணிகள் இந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது. லோகேஷ் கனகராஜின் லோகி யூனிவெர்ஸ் கான்செப்டில் நடிகர் விஜயும் இணைவாரா என்ற எதிர்ப்பார்ப்பு அனைத்து சினிமா ரசிகர்களிடமும் பெரிதும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களை பற்றிய தகவல்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பேசபட்டு வரும் நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல வில்லனும் லோகேஷ் கனகராஜுக்கு பிடித்த நடிகருமான மன்சூர் அலிகான் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் அதற்கு அவர் பதிலளித்துள்ளார்.
சேனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், விஜயின் முதல் படத்தில் நான் நடித்தேன். அவருடைய முதல் படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்தேன். இதுவரை நாங்கள் 10-க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளோம். சமீபமாக என்னால் அவருடன் நடிக்க முடியவில்லை. விஜய்யின் அடுத்தப் படத்தில் அவருடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் அடுத்ததக தளபதி 67 நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜின் கைதி படம் முதலில் மன்சூர் அலிகானுக்காக எழுதப்பட்டது என்று லோகேஷ் கூறியது குறிப்பிடத்தக்கது.