ராகுல் காந்தி என்ன சாதி அனுராக் தாக்கூர் கேள்வி..? மோடிக்கு கனிமொழி கண்டனம்..!
லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது., அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்புகள் ஏன் இடம்பெறவில்லை என கேள்வி எழுப்பினார். பட்ஜெட் அல்வா தயாரிப்பில் கூட ஓபிசி பிரதிநிதிகள் அதிகம் இல்லாதது ஏன் என்றார்.
அதற்கு அனுராக் தாக்கூர் பேசுகையில், தம்முடைய ஜாதி எது என தெரியாதவர்கள் எல்லாம் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசக்கூடாது. அதே சமயம் லோக்சபாவில் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது என அனுராக் தாக்கூர் பேசியுள்ளார்.
அதற்கு ராகுல்காந்தி தக்க பதிலடி கொடுத்துள்ளார்., “நீங்கள் என்னை எவ்வளவு வேணாலும் என்னை இழிவுபடுத்தி கொள்ளலாம். ஆனால் இதே நாடாளுமன்றத்தில் ஒருநாள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த படுவதற்கான சட்டம் கொண்டு வரப்படும். அந்த தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.
இந்த அவதூறுகளை எல்லாம் நான் மகிழ்சியாக ஏற்றுக் கொள்வேன். அனுராக் தாக்கூர் என்னை அவமதித்து., இழிவுபடுத்தினார். அதற்காக அவர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம் என்றார். அதற்கு பதிலடி கொடுத்த ராகுல் காந்தி, நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் இழிவுபடுத்திக் கொள்ளுங்கள்.. ஆனால் இதே நாடாளுமன்றத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் கொண்டு வந்தே தீருவோம் என்றார்.
இப்படி இருக்க அனுராக் தாக்கூரின் இந்த ஜாதி ரீதியான பேச்சை பிரதமர் நரேந்திர மோடி, பாராட்டி அவரது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அது தொடர்பாக சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கூறுகையில், நேற்று நாடாளுமன்றத்தில் “தன் சாதி தெரியாதவர் சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி பேசுவதா?” என்று ராகுல் காந்தி குறித்து அனுராக் தாக்கூர் பேசினார்.
அந்த பேச்சை அனைவரும் கேட்க வேண்டிய சிறந்த பேச்சு என்று பிரதமர் தனது X தளத்தில் பதிவிட்டார். நாட்டின் மிக உயர்ந்த ஒரு அவையில் பாஜகவின் குரல் எவ்வளவு அவலத்தோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது பாருங்கள்.
அதன் பின் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக நாடாளுமன்ற எம்பி கனிமொழி, “அனுராக் தாக்கூர் போன்ற மூத்த தலைவர்கள் இப்படி பேசுவது எதிர்பாராதது. ஜாதி குறித்து இப்படி பேசுவதால் இந்த நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும் என்கிற கவலை உள்ளது. இதை பிரதமர் மோடியும் தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது வருத்தம் அளிக்கிறது என்றார்.