நாய்குட்டியால் ராகுல்காந்தி மீது வழக்கு..!! இது நம்ப லிஸ்ட்லையே இல்லையே..?
மத உணா்வுகளைப் புண்படுத்தியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உலக விலங்குகள் தினத்தையொட்டி கடந்த 4ம் தேதி தனது தாயார் சோனியாவுக்கு “நூரி” என்று பெயரிடப்பட்ட நாய்க்குட்டியை ராகுல் காந்தி பரிசளித்தார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது தாயார் சோனியாவுக்கு அளித்த நாய்குட்டிக்கு “நூரி” என்று பெயா் வைத்ததை எதிர்த்து அவா் மீது உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
“நூரி” என்ற வார்த்தை இஸ்லாமிய புனித நூலான குரானுடன் தொடா்புடையது, என்றும், குரானில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளதாக அவர் வழக்குத் தொடுத்துள்ள மஜ்லிஸ் கட்சித் தலைவா் முகமது ஃபா்கான் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி மீது இந்திய தண்டனைச் சட்டம் 295 ஏ எனப்படும் மத உணா்வுகளைப் புண்படுத்துதல் பிரிவின் கீழ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.. என்று கோரி நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..