“ஜாதிவாரி கணக்கெடுப்பு தேசத்தில் எக்ஸ்ரே போல செயல்படும்”
ஜாதிவாரி கணக்கெடுப்பு தேசத்தின் எக்ஸ்ரே போல செயல்படும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் கால அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதன்படி, தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இம்மாநிலத்தில் நவம்பர் 3-ம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது.
இதையடுத்து, தெலங்கானாவில் தேர்தல் பரப்புரை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அம்மாநிலத்தில் 3 நாள் தேர்தல் பிரச்சார பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார்.
நேற்று, தெலங்கானா மாநிலம் முழுக் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், சிந்தனைகள், கோட்பாடுகள், அடையாளங்கள் ஆகியவற்றுக்கு இடையே காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் மோதல் போக்கு இருப்பதாக கூறினார்.
இதையடுத்து, இன்று பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலம் பூபாலப்பள்ளியில் பேசியபோது, ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தான் பேசும்போது, பிரதமரோ, தெலுங்கானா முதல்வரோ எதுவும் கூறவில்லை” என தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..