எந்த ஒரு இடத்திலும் 15 நாட்களுக்கு மேல் ஒரு வாகனம் நிறுத்தி வைத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதா கிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
சென்னை புதுப்பேட்டை உள்ள கூவம் பகுதியினை சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு ஆய்வு மேற்கொண்டார். மழைநீர் செல்லும் பாதைகளில் குப்பை அடைபட்டு இருந்ததைப் பார்த்து ஆணையர் இறங்கி சுத்தம் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதா கிருஷ்ணன், இரவு நேரங்களில் காரின் கழிவுகள், கட்டுமான இடி பொருள்கள் கட்டடக்கழிவுகள் அனைத்தும் கூவத்தில் கொட்டப்படுகிறது. மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயத்தில் அதில் அடித்துச் செல்லும்போது ஏதோ ஒரு இடத்தில் வெள்ளம் ஏற்படும் என்று அவர் கூறினார் .
இப்பகுதிகளில் டெங்கு காய்ச்சல், எலிக் காய்ச்சல் போன்ற நோய்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தொடர்ச்சியாக இப்பகுதியினை சுகாதாரமற்ற நிலையில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். கார்கள் பழுது பார்ப்பதற்கு தனியாக இடம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று பணியாளர்களுடன் சேர்ந்து நானும் இன்று நேரடியாக களத்தில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளேன்.
எந்த ஒரு இடத்திலும் 15 நாட்களுக்கு மேல் ஒரு வாகனம் நிறுத்தி வைத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் இந்த வாகனங்கள் நிறுத்துவதால் தான் டெங்கு கொசு அதிக அளவு உற்பத்தியாகிறது. இது போல குப்பைகள் கொட்டாமல் இருப்பதற்கு மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்