தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பில் ஈரோடு…!
நாடு முழுவது சில தினங்களகவே ரயில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், விமானநிலையங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவது தொடர்ந்து அரங்கேறி வருகின்றது.
அதன்படி ஈரோடு சேனாதிபதிபாளையத்தில் உள்ள செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 3000க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் .
இந்தநிலையில் இன்று இந்த பள்ளிக்கு காலை 8.15 மணியளவில் பள்ளியின் இணையதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டனர். விடுதியில் தங்கி படித்த மாணவ, மாணவிகளின் பொற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களை அவசரமாக தங்களது பொருட்களுடன் வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவு போலீசார், அதிவிரைவு படை போலீசார் ஆகியோரை வரவழைக்கப்பட்டு பள்ளி வளாகம் முழுவதும் தீவிர சோதனை மேற்க்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு சூழல் நிலவியது.