முகத்தை அழகாக வைக்கும் அரசி மாவு..!! இந்த ரகசியம் கேளுங்கள்..!
வீட்டில் அரிசிமாவு இருந்தால் அதில் நாம் இடியாப்பம், புட்டு, கொழுக்கட்டை, முறுக்கு என உணவிற்கு மட்டும் தான் பயன் படுத்துவோம்.., ஆனால் அதை வைத்து முகத்தையும் அழகாகவும் பொலிவுடனும் மாற்ற முடியும்.
அரிசி ஊற வைத்த தண்ணீரில் முகம் கழுவினால் மிக பொலிவாக மாறிவிடும். இன்றும் சீனாவில் அரிசி கலந்த தண்ணீரை வைத்து தான் முகம் மற்றும் தலைக்கு பயன்படுத்துகின்றனர்.
அரிசி மாவை முகத்தில் பயன் படுத்துவதால், முகத்தில் உள்ள சுறுக்கங்களை குறைத்து என்றும் இளமை தோற்றத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. இதை பல விதமாகவும் பயன்படுத்தலாம் அதை பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
ஸ்க்ரப்பர் : ஒரு ஸ்பூன் அரிசி மாவை எடுத்து, சிறிது அளவு தண்ணீரில் கலந்து தேய்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பிசு பிசுப்பு, முகத்தில் உள்ள அழுக்கை நீக்கிவிடும். 3 நிமிடங்கள் ஸ்க்ரப் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அப்படி செய்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.
பேஸ் பேக் : அரிசி மாவு ஒரு ஸ்பூன், தயிர் ஒரு ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் சிறிது அளவு எடுத்துக்கொண்டு அதை நன்கு குழைத்து கொள்ள வேண்டும். பின் முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.. இதனால் முகம் சுருங்காமல் என்றும் பொலிவுடன் இருக்கும்.
ஸ்ட்ரெச் மார்க் : குழந்தை பிரசிவித்த பெண்கள் அனைவரின் வயிற்றிலும் ஸ்ட்ரெச் மார்க் அதிகம் இருக்கும்.
இதை சரி செய்ய மஞ்சள் தூள், காய்ச்சாத பசும்பால், அரிசி மாவு சேர்த்து, பேஸ்ட் போல தயார் செய்துக் கொள்ளவும். ஸ்ட்ரெச் மார்க் இருக்கும் பகுதியில் தேய்த்து 30 நிமிடம் கழித்து, வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரத்தில் மூன்று முறை, தொடர்ந்து இப்படி செய்தால், ஸ்ட்ரெச் மார்க்க மறைந்து விடும்.
பேசியல் : ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் அரிசி மாவு, தேவையான அளவு தேன் மற்றும் பால் எடுத்துக்கொண்டு , இவை அனைத்தையும் சேர்த்து கலக்கி முகத்தில் தடவ வேண்டும். பின் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
வெ.லோகேஸ்வரி
Discussion about this post