கும்மிடிப்பூண்டியில் நடைபெற்று வரும் சவுடு மண் குவாரியில் அதிக எடையுடன் வந்த லாரி நிலை தடுமாறி வாலிபர் மீது லாரி ஏரி விபத்து. ஏற்பட்டது இந்த விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி போக்குவரத்து துறை மோட்டார் ஆய்வாளர் அலுவலகத்தின் பின்புறம் கடந்த 15 நாட்களாக சவுண்டு குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக லாரிகள் மூலம் சவுடு மண் அள்ளப்பட்டு வருகிறது. இந்த லாரிகளில் சுமார் 60 டன் எடையுடன் சவுடு மண் அள்ளிச் செல்லப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில். அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சுமார் 20 ராட்சத ஹிட்டாச்சி இயந்திரங்கள் கொண்டு ஆயிரக்கணக்கான லாரிகளில் சவுடு மண் மண்ணை அள்ளப்பட்டு பல்வேறு பகுதிகளில் கொண்டு செல்லப்படுகிறது.
அப்போது கும்மிடிப்பூண்டி அடுத்த ராக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மதன் குமார் (வயது 30) என்பவர் குவாரியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதிக எடையுடன் வந்த கனரக லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து உணவு அருந்தி கொண்டிருந்த ஓட்டுநர் மதன் மீது ஏறி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மதன் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக துடித்துடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரிவிக்கையில் அரசு விதிகளுக்கு மீறி அதிக அளவில் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுவதாகவும், இதுபோன்று உயிர் இழப்புகள் தொடர்வதற்கு முன்பாகவே அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
















