புதிய குற்றவியல் சட்டத்தில் மருத்துவர்களுக்கான தண்டனை..! உள்துறை அமைச்சருக்கு எம்பி கலாநிதி வீராசாமி கடிதம்..!
புதிய குற்றவியல் சட்டத்தில் மருத்துவர்களுக்கான தண்டனை பிரிவை உடனே நீக்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு எம்பி கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.
ஒன்றிய அரசு பாரதிய நியாய சன்ஹிதா என்ற புதிய தண்டனை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்தின் 106வது பிரிவின்படி எவரேனும் கவனக்குறைவாக அல்லது அவசரமாக செய்யும் செயல், ஒருவது உயிரிழப்பிற்கு காரணமானால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படும்.
இது போன்ற கவனக்குறைவான முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கும் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் செயலால், நோயாளிகளுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால், அந்த மருத்துவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபதாரம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.. இதன் மூலம் மருத்துவர்கள், சிகிச்சையின் போது செய்யும் கவனக்குறைவான செயல்களுக்கு அதே தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று கூறியுள்ளார் .
இதுதொடர்பாக, நாடாளுமன்றத்தில் பேசியபோது, மருத்துவர் சிகிச்சை வழங்கும் போது ஏற்படும் மரணம் என்பது கொலை என்று சொல்ல முடியாது .அப்போது நீங்கள் வழங்கிய உறுதிக்கு மாறாக கூறப்பட்டுள்ளது. எந்த வகையில் நியாயம்என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கிய போது, எத்தனை மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். என்பதை உங்கள் அரசு மறந்து விட்டதா..? அல்லது அந்த மருத்துவர்களுக்கு அவர்கள் வழங்கும் சிகிச்சையின் போது எதிர்பாராத விதமாக சில நிகழ்வுகள் ஏற்படும்போது அதற்கு அவர்களைப் பொறுப்பாக்கி இத்தண்டனைச் சட்டத்தின் மூலம் சிறை தண்டனை வழங்குவது தான் உங்கள் நோக்கமா என சாடியுள்ளார்.
மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் மருத்துவரின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டுடிருக்கும் அரிவாளாக இந்தச் சட்டம் அமைந்துள்ளது. இந்த தண்டனை சட்டப்பிரிவு மருத்துவ சேவை வழங்குவதில் உள்ள இடர்பாடுகளை கருத்தில் கொள்ளாமல் மருத்துவம் என்னும் தொழிலின் மருத்துவம் அறியாமல், நோயாளிகளுக்காக ஓய்வின்றி தன்னை அறியாமல் நோயாளிகளுக்காக தொண்டாற்றும் மருத்துவர்களின் அருஞ்செயல்களைப் புரிந்து கொள்ளாமல் உருவாக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சேவை வழங்கும்போது அறியாமல் ஏற்படும் தவறுகள் குற்றச் செயல்கள் என்று சொல்லுவது தவறாகும் என்பதை புரிந்து கொண்டு இந்த சட்டப்பிரிவை திரும்ப பெற வேண்டும். அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..