எச் ராஜாவின் பொறுக்கி வேலைகள் எல்லாம் இங்கே காட்டக்கூடாது என ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் வா.புகழேந்தி அவர்களின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது,
*அப்போது பேசிய, புகழேந்தி,
ஒரு வழியா விஜயலட்சுமி, வீரலக்ஷ்மி சீமான் கதை ஒளிந்து விட்டது, இரவோடு இரவாகவே முடிந்தது என்று சிரித்துக் கொண்டே தெரிவித்தார். இவர்களே புகார் தெரிவிப்பதும் இவர்களே வாபஸ் வாங்குவதும் வேடிக்கையாக உள்ளது.
காஞ்சிபுரத்தில் ஒபிஸ் புரட்சி பயனம் பாதியில் பயணம் முடித்து விட்டது வேதனை அளிக்கிறது. இத்தேதி விரைவில் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் அண்ணா பெரியார் போன்ற தலைவர்களை இழிவாக பேசிவிட்டு பாஜக மூத்த தலைவர்
h. ராஜா தமிழகத்தில் வாழ்ந்து விட முடியாது . எச் ராஜாவின் பொறுக்கி வேலைகள் எல்லாம் இங்கே காட்டக்கூடாது. இதை மீறியும் தவறாக பேசினால் தொண்டர்களின் வாய் பேசாது கைகள் தான் பேசும்.
ஏதோ அண்ணாமலையின் நடை பயணம் என்று கூறுகிறார் என்னவென்று புரியவில்லை, வேடிக்கையாக உள்ளது. முதலமைச்சரின் பள்ளிப் பிள்ளைகளின் காலை உணவு திட்டத்தை வரவேற்கிறேன்.. இத்திட்டம் பாராட்டுக்குரியது எனவும்,
அதே போல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தொகை மகளிர் திட்டமும் வரவேற்கத்தக்கது பாராட்டுத்தக்கது, ஆனால் இதையெல்லாம் அம்மா, எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் முன்கூட்டியே செய்து விட்டார்கள்.
*கொடைநாடு கொலை வழக்கில் 17 பேர் இதுவரை காவல் துறை விசாரித்துள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இடம் விசாரணை நடத்தப்படாதது ஏன்,? எடப்பாடி பழனிசாமியை பார்த்து ஏன் இந்த அரசாங்கம் பயப்பட வேண்டும்.
அடுத்த ஒரு வாரத்தில் எடப்பாடியிடம் விசாரணை நடக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் எச்சரித்தார். இன்றைக்கு ஆண்களுக்கு இணையாக பெண்கள் இருக்க காரணம் பெரியார் அண்ணா போன்ற தலைவர்கள் என்று பேசினார்.
இதையும் படிக்க: நிபா வைரஸ் தாக்கம்… அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு.. எச்சரிக்கை விடுத்த அமைச்சர்..!