மணிப்பூர் அரசு எதிர்த்து கன்னியா குமரியில் திமுக சார்பில் போராட்டம்..!!
மலைவாழ் பழங்குடியினரின் உரிமையைப் பாது காப்பதற்காக 3.5.2023 அன்று மணிப்பூர் அனைத்துப் பழங்குடி இட மாணவர் கூட்டமைப்பு (All Tribal Students’ Union Manipur) (ATSUM) சார்பில் மலைவாழ் பழங்குடி யினரின் ஒற்றுமைப் பேரணியை எட்டு மலை மாவட்டங்களில் நடத்தினர். பா.ஜ.க ஆட்சியின் ஆதரவோடு மெய்த்தேயி குழுவினர் பழங்குடி மக்கள் மீது மிகப்பெரியத் தாக்குலை நடத்தினர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையில் மிகப்பெரிய வன்முறை மூண்டது.
3.5.2023 அன்று தொடங்கிய வன்முறைப் போராட்டம் இன்று வரை தொடருகிறது. ஏராளமான வீடுகள், தேவால யங்கள், மருத்துவமனைகள் தீக்கிரையாக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் பழங்குடியினரே ஆவர்.
இலட்சக்கணக் கானவர்கள் தங்கள் உடைமைகளை இழந்து பரிதவித்தனர். வீடிழந்தவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அகதிகள் முகாம்களில் தங்கினர். இராணுவமும், அசாம் ஆயுதப்படையும் வரவழைக்கப்பட்டது. மெய்த்தேயி இன மக்கள் வாழும் சமவெளிப் பகுதியில் பெரும்பான்மையினர் இந்துக்கள், சிறுபான்மையினர் கிறித்தவர்கள். சங்பரிவாரக் கும்பல்கள் அந்த பகுதியில் மட்டும் 247 தேவாலயங்களை அழித்தனர்.
உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தின்காங்க்லுங்க் காங்க்மேய் இரண்டு மேல்முறையீடுகளை உச்சநீதி மன்றத்தில் செய்தார். ஒன்று மெய்த்தேயி மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரைக்குத் தடை. இரண்டாவது நீதிமன்ற அவமதிப்புக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன் விசாரணைக்கு வந்தது. மேல் முறையீடு செய்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரும் மலைவாழ் பகுதி குழுவின் தலைவருமான தின்காங்க் லுங்க் காங்க்மேய் பா.ச.க. வின் மேலிடம் அழுத்தம் காரணமாகத் திரும்பப் பெற்றார்.
அந்த மேல் முறையீட்டு வழக்குகளை அனைத்து இந்திய பழங்குடி மாணவர் சங்கத்தின் தலைவர் பட்டின்தாங் லூபெங் (Paotin thang Lupheng) தொடர்ந்து நடத்தினர்.
7.5.2023 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “எந்த மாநிலத் திற்கும் எவர் எவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான அதிகாரம் நீதித்துறைக்கு இல்லை என்று உச்சநீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளதை எடுத்துக்காட்டி மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது” என்று தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் மெய்டீஸ் இனத்தை சேர்ந்த வஞ்ச நெஞ்சம் கொண்ட இளைஞர்கள் குக்கி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.., அதுமட்டுமின்றி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இந்த சம்பவத்திற்கு ஆளாக்கப்பட்ட பெண் என் மனைவி தான் என்று ராணுவ வீரர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். நாட்டிற்காக எங்கள் உயிரை பணைய வைத்து நாங்கள் இங்கு இருக்கிறோம். ஆனால் எங்கள் வீட்டிற்கே பாதுகாப்பு இல்லை என்ற கண்ணீர் மல்க பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்
மணிப்பூரில் பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமையை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திமுக மகளிரணி சார்பில் கண்ணில் கறுப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்கள் மட்டுமல்ல மனிதர்கள் அனைவரும் மிருகங்களை போல் நடத்தப்படுவதாக மகளிரணி மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன் பேட்டி.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த கலவரம் தொடர்பாக தற்போது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் பெண்கள் மீது நடத்தப்பட்டுள்ள வன்கொடுமை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் நாட்டையே உலுக்கி வருகிறது.
இக்கொடுர செயலை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு கட்சியினர் இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டார். இதில் கண்ணில் கறுப்பு துணிகட்டி திமுக மகளிரணி மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க., ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்கள் மட்டுமல்ல மனிதர்கள் அனைவரும் மிருகங்களை போல் நடத்தப்படுவதாக மகளிரணி மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன் பேட்டியளித்தார்.

















