பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்..! அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்..!
பேரூரில் 4 ஆயிரத்து 276 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தினமும் 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் மையம் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து இன்று காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
JICA எனப்படும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகாமை நிதியுதவியுடன் இந்த நிலையம் அமைக்கும் பணி டிசம்பர் 2026க்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இந்த பசுமை நலத்திட்டத்தின் கீழ் 40 பேரை நேர்முக காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமானம் செய்யப்பட்டுள்ளனர்.
பசுமை தோழர் என்று அழைக்கப்படும் இவர்கள், காலநிலை பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு கொள்கை திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வர இருப்பதாகவும்.., அதற்கான மேற்பார்வைகளை மாவட்ட ஆட்சியர் சுற்று சூழல் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..