கில்லிக்கு பின் இந்த படம் தானா..? தெலுங்கில் கொண்டாடும் தமிழ் படம்..! பிரான்சிலும் ரிலீஸ்..!
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான திரைப்படம் அந்நியன். இப்படம் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. மேலும் இப்படத்தில் விக்ரம், சதா, விவேக், மனோபாலா ஆகியோர் நடித்தள்ளனர்.
இது பன் மனோபாவ ஒழுங்கின்மை நோயினை மையமாகக் கொண்ட கதையம் சத்தில் உருவானதால் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினார்கள்.
பிரான்சில் வெளிவந்த முதல் தமிழ் திரைப்படம் :
இது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஆரம்பத்திலும் பின்னர் பிரெஞ்சு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளிவந்தது. இதுவே பிரஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரான்சில் திரையிடப்பட்ட முதலாவது இந்தியத் திரைப்படமாகும் என்பது பெருமைக்குரியது.
பழைய தரமான திரைப்படங்கள், மீண்டும் ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் தற்போது தொடங்கியுள்ளது. இவ்வாறு ரீ ரிலீஸ் செய்யும் படங்களுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், இது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரீ ரிலிஸ் செய்யப்பட்ட கில்லி அனைத்து ரசிகர்களால் திரையரங்கில் பட்டையை கிளப்பி வருகின்றது.
தெலுங்கு மொழியில் ரீ ரிலிஸ் செய்யப்பட்ட அந்நியன் :
தமிழகத்தில் மட்டுமின்றி, தற்போது மற்ற மொழி பேசும் மாநிலங்களிலும், இந்த ட்ரெண்ட் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நடிகர் விக்ரம் நடித்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான அந்நியன் திரைப்படம், தெலுங்கு மொழியில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
படத்தை கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள் :
இப்படத்தை பார்த்த தெலுங்கு மொழி ரசிகர்கள் புதுப்படத்தை போல கொண்டாடி வருகின்றனர். ஒரு தமிழ் திரைப்படம், ரீ ரிலீஸில், வேறொரு மாநிலத்தில் கொண்டாடப்பட்டு வருவது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
-பவானி கார்த்திக்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..