தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் மரணம் குறித்தான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டசபையில் கொண்டுவரப்பட்டு தற்போது அது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டபொழுது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி மருத்துவ வசதி கூடிய சிறப்பு விமானம் மூலம் வெளிநாடுசென்று சிகிச்சை பிற வசதிகளை செய்து கொடுத்தார் ஆகையால் எம்.ஜி.ஆர்.அவர்கள் உயிர் பிழைத்தார்.
அதேபோல் ஜெயலலிதாக்கும் பிரதமர் மோடி அல்லது அமைச்சர்கள் யாரேனும் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் ஜெயலலிதா உயிரோடு இருந்துருப்பார். என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்