பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால் குஜராத் மாநிலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குஜராத்தில் பிரதமரின் தாயார் 99 வயதான ஹீரா பென் அவருக்கு நேற்றிரவு திடீரெனெ உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது இதனால் அவர் அகமதாபாத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்ட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு ஹீரா பென் உடையாள் உடல்நலம் சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு பிரதமரின் தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.அதனை தொடர்ந்து, நேற்று கர்நாடகாவில் பிரதமரின் சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தார் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது, இதில் அவரது சகோதரரின் கால் எழுப்பு முறிந்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சிகிச்சைக்கு பிறகு மோடி தனது தாயாரை சந்திக்கவள்ளார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.