இந்தியாவின் தொலை தொடர்பு துறை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் பிரகதி மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். புதுதில்லியின் பிரகதி மைதானத்தில் நடைபெறும் இந்திய மொபைல் காங்கிரஸ் (ஐஎம்சி) நிகழ்ச்சியில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தினார்.
Historic day for 21st century India! 5G technology will revolutionise the telecom sector. https://t.co/OfyAVeIY0A
— Narendra Modi (@narendramodi) October 1, 2022
நிறுவனம் 5ஜி சேவை படிப்படியாக நிறுவப்படும் என தெரிவித்த நிலையில் தற்போது இந்த 5ஜி சேவையானது முதல் கட்டமாக நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் தீபாவளி முதல் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து மற்ற நகரங்களில் படிப்படியாக நிறுவப்படும் என கூறியுள்ளனர். அடுத்த வருடம் 2023 டிசம்பரில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி சேவை இருக்கும் என தெரிவித்தார்.
5ஜி முதல் படியாக டெல்லி விமான நிலையத்தில் நிறுவப்படும் என்றும் இந்த சேவையை டெர்மினல் 3 ல் உள்ள பயணிகள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என கூறியிள்ளனர். சீனாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் சந்தையாக இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது.