ADVERTISEMENT
கொல்கத்தாவில் நீருக்கடியில் செல்லும் முதல் இந்திய மெட்ரோ ரயில் சேவை…
கொல்கத்தாவில் நீருக்கடியில் செல்லும் முதல் இந்திய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
மேற்கு வங்கத்தில் 15,000 கோடி மதிப்பிலான பல்வேறு மத்திய அரசின் நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து, கொல்கத்தா கிழக்கு-மேற்கு மெட்ரோ வழித்தடத்தில் ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் இடையே நீருக்கு அடியில் கட்டப்பட்டுள்ள மெட்ரோ வழித்தடத்தை தொடக்கிவைத்தார்.
இந்தியாவின் முதல் நீருக்கடியில் பயணிக்கும் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர், பள்ளி மாணவர்களுடன் பயணம் மேற்கொண்டார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.