ஊழல் பட்டியலை வெளியிடும் தலைவர் விஜய்…!! அடுத்த திட்டம்…?
தமிழகத்தில் ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகளின் ஊழல் பட்டியலை வெளியிட தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது கட்சியை தொடங்கினார். அதன் பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தன்னுடைய கட்சியின் கொடியையும்., கட்சியின் பாடலையும் வெளியிட்டார்..
இவரது கட்சியின் கொடியில் இடம் பெற்றுள்ள யானை சின்னமானது பகுஜன் சமாஜ் கட்சியில் இடம் பெற்றுள்ளது எனவே அதனை விஜய் பயன் படுத்தக் கூடாது என அக்கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தனர்.. ஆனால் அதற்கு தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தினர் அக்கட்சி கொடியை பயன் படுத்திக்கொள்ளலாம் அதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என பதில் அளித்திருந்தது..
அதன் பின்னர் கடந்த மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. அப்போது தவெகவின் திட்டங்கள் குறித்தும் கொள்கைகள் குறித்தும் தலைவர் விஜய் பேசியிருந்தார். அவரின் அந்த முதல் அரசியில் பேச்சு அக்கட்சி நிர்வாகிகளை மட்டுமின்றி பொதுமக்களையும், மற்ற அரசியல் கட்சி தலைவர்களையும் கவனிக்க வைத்தது.
இந்நிலையில் தமிழகத்தை ஆளும், மற்றும் ஆண்ட கட்சிகளின் ஊழல் பட்டியலை தயார் செய்ய தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக திமுக, மற்றும் அதிமுகவின் ஊழல் படியல்களை தகுந்த ஆதரங்களோடு வெளியிட வேண்டும் என்பதற்காக., தன் வழக்கறிஞர்கள் உதவியோடு ஊழல் பட்டியல்களை தயார் செய்து வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
இந்த ஊழல் பட்டியலை அவர் மாவட்டம் முழுவதும் சுற்று பயணம் செல்வதற்கு முன்னரே வெளியிடுவார் எனவும் ஊழல் என்ற குற்றச்சாட்டை பிரதானமாக்கி மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது..
மேலும் இந்த ஊழல் பட்டியலை கொண்டு தமிழக ஆளுநரை சந்தித்து பேச அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக தலைவர் விஜயின் இந்த திடீர் முடிவு அரசியலில் பெரும் மாற்றத்தை எற்படுதாமா அல்லது சர்ச்சையை கிளப்புமா என எதிர் பார்ப்பில் உள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..