“மாவீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு பிரேமலதா மரியாதை”
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ள அழகு முத்துகோன் அவரது திருவுருவச்சிலை மற்றும் அவரது திருவுருச்சிலைக்கு கீழே வைக்கப்பட்டு இருந்த திருவுருவப்படத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது,
சுந்தரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்த நாள் தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் மிக முக்கியமான நாள் என தெரிவித்தார். அவரது சிலைக்கு தேமுதிக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்ததில் மகிழ்ச்சி எனவும் சுதந்திரப் போராட்டத்திற்கு அரும்பாடு பட்ட முதல் தமிழகத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் தெரிவித்தார்.
– லோகேஸ்வரி.வெ