பொன்னேரி எல்லையம்மன் கோவில்.. முதலாம் ஆண்டே இவ்ளோ சிறப்பா..!!
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பாரதிநகரில் அருள்மிகு ஸ்ரீஎல்லையம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீமிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆடி மாதம் என்றால் கோவில் திருவிழாக்கள் கூழ் ஊற்றுவது என அந்த மாதம் முழுவதுமே எப்போதும் விசேஷமாக இருக்கும்.., அந்த மாதத்தில் அம்மன் வீதி உலா., பக்தர்கள் தீச்சட்டி., அலகு குத்துதல், என நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்..
அப்படியாக கடந்த மாதம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டது., ஒரு சில கிராமங்கள் மற்றும் ஊர்களில் ஆடி மாதம் முடிந்து திருவிழாக்கள் கொண்டாடுவது வழக்கம்.. அப்படி தான் இக்கோவிலிலும் கொண்டாடப்பட்டுள்ளது..
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள மெதூர் ஊராட்சி பாரதிநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு தீமிதிவிழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. கிராமதேவதை ஆலயத்தில் இருந்து புறப்பட்ட பக்தர்கள் காப்புகட்டி கடந்த பத்து நாட்களாக விரதம் இருந்து பக்தியுடன் கரகம் தீச்சட்டி ஏந்தியும் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி முதல் தடவையாக தமது கிராமத்தில் இளைஞர்கள் உள்ள எல்லையம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதத்தில் பக்தியுடன் தீமிதித்தனர். அதில் பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீஎல்லையம்மனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பாரதிநகர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..