நடிகர் விஜய் நடித்து வரும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் வாரிசு திரைப்படத்திற்கு இப்போதிருந்தே எதிர்ப்பார்ப்பும் பிரச்சனைகளும் எழுந்து வருகிறது. இருப்பினும் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளது.
தெலுகு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்றும் விஜயின் ரசிகர்கள் கொண்டாடும் படமாகவும் இருக்கும் என்றும் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் விஜயின் சினிமா போட்டியாளரான அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது அறிவித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜய் பாடிய வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியாகி உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அதனை தொடர்ந்து படத்தின் அடுத்த பாடல் குறித்து பல தகவல்கள் கசிந்து வருகின்றது. வாரிசு படத்தின் இரண்டாம் பாடல் வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இருப்பினும் இதுகுறித்து எந்தவொரு அதிகார்வப்பூர்வ அப்டேட்டும் வெளியாகவில்லை.இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்ககூடும் என்பதில் சந்தேகமில்லை.