”சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்..” முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..!!
தமிழ்நாடு காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2025 பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் மீட்புப்பணியினர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணியாளர்கள் மொத்தம் 3 ஆயிரத்து 186 பேருக்கு, அவர்களது நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரிக்கும் விதமாக பொங்கல் திருநாளானன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணை பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக வெளியான அறிக்கையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் 120 பேருக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணியாளர்கள் மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் 60 பேருக்கும், தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படியாக 400 வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..