ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகங்கள் திறப்பு…!!
27.33 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 8 கோடியே 13 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விழுப்புரம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகங்கள், மற்றும் 19 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீல் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்கள், மற்றும் விடுதிக்கட்டடங்கள் என 27 கோடியே 33 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திறந்து வைத்தார்.
அதன் பின்னர் சாகித்ய அகாடமி விருது பெற்ற 10 விருதாளர்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். முன்னதாக மகிந்திரா நிறுவனத்தின் மின்சார எஸ்.யூ.வி. கார் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..