திருடப்பட்ட 12 பைக்குகள்.. பறிமுதல் செய்த போலீஸ்..!
வேலூர்மாவட்டம்,பேரணாம்பட்டு பெங்களூரில் இருந்து திருடப்பட்ட 12 பைக்குகள் கர்நாடகா மாநில போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு கொண்டு சென்றனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கர்நாடக மாநிலம் பெங்களூர் ஜே பி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பைக்குகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருடு போய் உள்ளது.இது குறித்து பெங்களூரு ஜே பி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெங்களூர் பகுதியை சேர்ந்த வினய்விஜய் (25), இலியாஸ் (23) இருவரையும் ஜே பி நகர் போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர் விசாரணையில் திருடு போன பைக்குகள் தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கோட்டைச்சேரி பகுதியில் வசிக்கும் மாரி என்பவரின் மகன்களான கதிரவன், நிரஞ்சன் மற்றும் மத்தூர் பகுதியை சேர்ந்த சதீஷ் ஆகியோரிடம் இருப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் கர்நாடக போலீசார் எஸ்ஐ சைனய்யா தலைமையில் தனிப்படையினர் பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உத்தரவின் பேரில் போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டையை துவங்கினார்.இதில் கோட்டைச்சேரி பகுதியைச் சேர்ந்த கதிரவன், நிரஞ்சன் ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்ய முற்படும்போது போலீசாரை கண்டதும் இருவரும் தப்பி ஓடி உள்ளனர்.
-பவானி கார்த்திக்