ஈரோட்டில் லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தவர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில் தனிப்படை காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த குப்புராஜ் மற்றும் கல்லாங்காட்டு வலசை சேர்ந்த மகேந்திரன் உள்ளிட்ட 6 நபர்களும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை போலியாக உருவாக்கி விற்பனை செய்தபோது கையும் களவுமாக பிடிபட்டனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் 6 பேரையும் கைது செய்ததோடு, லாட்டரி விற்பனை செய்ய பயன்படுத்திய 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
