குடியாத்தம் மகாநதி ஆற்றில் மணல் கடத்தும் கும்பல் கைது…
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மகாநதி ஆற்றில் மர்ம நபர்கள் மணல் கடத்தி செல்வதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் தொடர்ந்து இருசக்கர வாகனத்திலும் மாட்டு வண்டிகளிலும் மணல் கடத்துவதாக புகார்கள் வந்தன. இந்நிலையில் சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை வைத்து காவல்துறையினர் மணல் கடத்துபவர்களை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து மணல் கடத்தும் கும்பல் காவல்துறை பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை இரவு நேரங்களில் கல்லால் அடித்து சேதப்படுத்தினர். அதில் பதிவான காட்சிகளை வைத்து காவலர்கள் அவர்களை தேடி வருகின்றனர்.
இரவு மற்றும் பகல் நேரங்களில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் மூட்டைகளில் மணல் கடத்துவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.