மதுவிலக்கு கோரி மெரினாவில் மீண்டும் கூடும் கூட்டம்..? போலீஸார் பாதுகாப்பு…!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் என்ற ஊரில் இறந்த ஒருவரின் இறுதி சடங்கிற்கு வந்தவர்களுக்கு வழங்கப்பட்ட கள்ளச்சாராயம் விஷமாக மாறி இதுவரை 55 பேர் ரத்த வாந்தி, வயிற்றுப்போக்கு, கோமா, பார்வை இழப்பு, நரம்பு தளர்ச்சி ஆகிய உடல் நலக்கோளாறுகள் ஏற்ப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
மேலும் மருத்துவமனைகளில் 12 க்கும் மேற்ப்பட்டோர் கவலை கிடத்தில் உயிருக்கு போராடி வருகின்றனர்.
விஷச்சாராயத்தால் உயிரழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோல அதிமுக எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆண்டுகளுக்கு ரூ. 5 ஆயிரம் மாதந்தோறும் வழங்கப்படும் என்றும், அந்த குடும்பத்தில் பெற்றோர்களை இழந்து வாடும் 3 பிள்ளைகளின் படிப்பு செலவை அதிமுக ஏற்க்கும் எனவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து விஷச்சாராயம் வழக்கில் இதுவரை 8300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சூழலில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பாமக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை அளித்து வருகிறார்கள்.
சமூக ஆர்வலர்களின் கோரிக்கையும் இதுவாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு நடந்த புரட்சி போல மீண்டும் மெரினாவில் ஒரு புரட்சி நடத்த போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில், இன்று மெரினாவில் 150 க்கும் மேற்ப்பட்ட போலீசார்கள் கலங்கரை விளக்கம் முதல் கண்ணகி சிலை வரை குவிந்துள்ளனர்.
இந்நிலையில் யாரேனும் போராட்டம் நடத்தப்போவதாக இருந்தால் அவர்களை கைது செய்யவும் போலீசார்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.