பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் அன்புக்குரிய தாயார் ஹீராபாவுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பை நாங்கள் அனைவரும் அறிவோம் என தெரிவித்துள்ளார்
தாயின் இழப்பை யாராலும் தாங்க முடியாது என தெர்விதுள்ள முதலமைச்சர் உங்கள் இழப்புக்காக தான் மிகவும் வருந்துவதாகவும் தன்னுடைய வருத்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்
துயரத்தின் இந்த நேரத்தில் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாக தெர்வித்துள்ள முதலமைச்சர் உங்கள் அம்மாவுடன் நீங்கள் இருந்த நினைவுகளில் அமைதியையும் ஆறுதலையும் பெறுவீர்கள் என்று பதிவிட்டுள்ளார்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் அன்புத் தாயார் ஹீராபென் அம்மையார் நூறாண்டுகள் வாழ்ந்து, மறைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த துக்கச் செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைவதாகவும் இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக் கூடிய மனவலிமையையும் உறுதியையும் இயற்கை உங்களுக்கு வழங்கட்டும் என வைகோ தமது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நமது பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அதிகாலை காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தாகவும் அதிமுக சார்பில் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.
இதேபோல் , பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவிற்கு பாஜக தமிழ்நாடு சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கொள்வதாகவும் இந்த கடினமான நேரத்தில் நம் தேச மக்கள் அனைவரும் பிரதமருக்கு பக்கபலமாக இருப்பார்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.