மும்பை விமான நிலையத்தில் ஒரு டீ, 2 சமோசா மற்றும் ஒரு தண்ணீர் பாட்டிலை 490 ரூபாய்குக்கு வாங்கியதாக Farah Khan என்ற ஊடகவியலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தகவல், இணையத்தில் வைரலாகி வருகிறது.
தான் வாங்கி அந்த 3 பொருட்களுக்கான பில்லை-யும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதனை 13 லட்சம் பேர் பார்த்தும், ஆயிரக்கணக்கானோர் ரீ ட்வீட் செய்தும் உள்ளனர்.
அதில் பலர், ஒரு தண்ணீர் பாட்டில், ஒரு டீ, 2 சமோசாவுக்கு இவ்வளவு விலையா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதே பொருட்களை மும்பை ரயில் நிலையத்தில் வெறும் 52 ரூபாய்க்கு வாங்கியதாக ஒருவர் செய்துள்ள ட்வீட்டை பலரும் லைக்செய்து வருகின்றனர்.