கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நல குறைவால் பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 82. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த ஆண்டு பீலேவிற்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளும் இருந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது.
இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது, மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் பதிவில், பீலே கால்பந்தாட்டத்தின் கிங் மட்டுமல்ல, 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆளுமைகளில் ஒருவராகவும், மில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்தியவராகவும் இருந்தார் என பதிவிட்டுள்ளார்
#Pele was not just the #TheKing of Football, but also, unarguably, one of the most influential personalities of the 20th century who inspired millions. The #BlackPearl will always remain an icon of the game in every sense.
He leaves behind an unforgettable legacy. pic.twitter.com/AxgsmRbXGl
— M.K.Stalin (@mkstalin) December 30, 2022
எப்போதும் எல்லா வகையிலும் விளையாட்டின் சின்னமாக இருக்கும் அவர் ஒரு மறக்க முடியாத பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.