உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு…!!
அமெரிக்க சென்றுள்ள பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்து பேசினார். பிரதமர்நரேந்திர மோடி அண்மையில் உக்ரைனுக்கு மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்ந்த இரு தலைவர்களும், இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படுவது குறித்து திருப்தி தெரிவித்தனர்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் “குவாட்” அமைப்பின் உச்சி மாநாடு (Quad Summit), அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் அமெரிக்காவின் டெலாவாரேயில் உள்ள வில்மிங்டனில் நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 21ம் தேதி இந்தியாவில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா சென்றார். அங்கு நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தி வரும் இரண்டு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் பேசப்பட்டதாவது., ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நிறுத்தம் குறித்தும், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடக்கும் போரை நிறுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..
மூன்று நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் 297 பழங்கால சிலைகளை அந்நாட்டு அரசு இந்தியாவிடம் ஒப்படைத்து உள்ளது. அந்த வகையில் 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை 578 சிலைகள் அங்கிருந்து திரும்ப பெறப்பட்டு உள்ளன. இதற்கிடையே, நியூயார்க்கில் உலகின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
உக்ரைனின் நிலைமை மற்றும் அமைதிக்கான பாதையைப் பின்பற்றுவதற்கான முன்னோக்கிய பாதை ஆகியவையும் அவர்களின் விவாதங்களில் முக்கியமாக இடம்பெற்றன. ராஜதந்திரம், பேச்சுவார்த்தை மற்றும் அனைத்து தரப்பினருக்கும் இடையேயான ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் மோதலுக்கு அமைதியான தீர்வு காண இந்தியாவின் தெளிவான, நிலையான மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
மோதலுக்கு நீடித்த மற்றும் அமைதியான தீர்வை ஏற்படுத்துவதற்கு அனைத்து ஆதரவையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று மோடி தெரிவித்தார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..