78-வது சுதந்திர தின விழா செங்கோட்டையில் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி..!!
நம் நாட்டின் 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு “பிரதமர் நரேந்திர மோடி” டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார்.. அதற்கு முன்னதாக, காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின் அவருக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின் பிரதமர் மோடி, தேசியக் கொடியை ஏற்றினார்.. தொடர்ந்து 11-வது முறையாக பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை ஹெலிகாப்டர் மூலம் தேசியக் கொடிக்கு மலர்கள் தூவப்பட்டது.
அதன் பின் மக்கள் முன் பேசிய பிரதமர் மோடி “வளர்ந்த பாரதம் 2047 (விக்சித் பாரத்)” என கூறியுள்ளார்.. இந்த சுதந்திர தின விழாவில் இளைஞர்கள், பழங்குடியின சமூகத்தினர், விவசாயிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 6,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேசியக்கொடிக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்..
டெல்லி செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நகரின் முக்கிய இடங்களில் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் டெல்லி போலீஸார், எல்லை பாதுகாப்பு படையினர், ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி முழுவதும் உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அசம்பாவிதங்களை தடுக்க உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு படையினர், உளவு பிரிவு போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.