பவன்கல்யாணல் பரபரப்பாகிய ஆந்திரா..!!
ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் “சந்திரபாபு நாயுடு” ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்., எனவே அவரை சந்திக்க நடிகர் பவன் கல்யாண் சென்ற போது காவல்துறையினர் பார்க்க மறுத்ததால் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான “சந்திரபாபு நாயுடு” ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார், இந்த உத்தரவை தற்போதைய ஆந்திரா முதல்வர் “ஜெகன் மோகன் ரெட்டி” பிறப்பித்தார்.
சந்திரபாபு நாயுடுவின் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின் அவரை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் யார் யாருடன் தொடர்பு உள்ளது என தெரிந்து கொள்வதற்காக விஜயவாடாவில் உள்ள விசாரணை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். விடிய விடிய விசாரணை நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு அவரை விஜயவாடாவில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சிஐடி அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன
இந்நிலையில் நேற்று இரவு 12 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து “ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண்” விஜயவாடாவை நோக்கி வந்தார். பவன் கல்யாண் வருகைப் பற்றி தகவல் அறிந்த பல்லாயிரக்கணக்கான ஜனசேனா கட்சி தொண்டர்கள் அவரை வரவேற்க குவிந்தனர்.
ஏற்கனவே சந்திரபாபு நாயுடு கைது காரணமாக பரபரப்பாக இருந்த விஜயவாடா இன்னும் பரபரப்படைந்தது.
பவன் கல்யாணை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை விஜயவாடாவுக்குள் செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டனர். எனவே பவன் கல்யாண் தன்னுடைய காரின் மேல் அமர்ந்த நிலையிலும், சாலையில்படுத்தும் சுமார் 2 மணி நேரம் தூங்கினார். நீண்ட போராட்டத்திற்கு பின், பவன் கல்யாணை போலீசார் அவரை வேறு பகுதிக்கு அழைத்து சென்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..