நாற்று நடும் போராட்டம்…!! பரபரப்பான அரியலூர்…!!
அரியலூர் சேரும் சகதியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அரியலூர் மாவட்டம் இலந்தை கூடம் கிராமத்தில் கிராமத்தில் சுமார் 4000 குடும்பத்துக்கு மேல் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதிகளில் வருடம் தோறும் மழைக்காலங்களில் சேரும் சகதியமாக சாலை காணப்படும்
இதனால் இப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாத நிலை ஏற்படும் எனவே சாலையை சீரமைத்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
ஆனால் இதுவரை சாலையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் இந்த கிராமத்தில் தான் திமுக ஒன்றிய செயலாளர் திமுக திருமானூர் ஒன்றிய சேர்மன் ஊராட்சி மன்ற தலைவர் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சேரும் சகதியுமான சாலையை கடந்தே சென்று வருகின்றனர் இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை
இந்நிலையில் இப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் பெய்த மழையின் காரணமாக வழக்கம் போல் இழந்தைகுடம் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே சாலை சேரும் சகதியுமாக மாறி பொதுமக்கள் பெரிது பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சேரும் சகதியமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனால் அப்பகுதியில் பெரும்பரப்பு பரப்பு ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த திருமானூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..