மகனை பிளான் போட்டு கொலை..!! நாடகமாடியா குடும்பம்..!! போலீசில் சிக்கியது எப்படி..?
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆலாமரத்தூரில் சொந்த மகனை கொலை செய்த வழக்கில் அம்மா அக்கா உட்பட ஐந்து பேர் கைது….
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆலாமரத்தூர் பகுதியில் விவசாயம் செய்துவந்தவர் சிவக்குமார். இவர் தனது அம்மா பொன்னுதாயுடன் வசித்துவந்த நிலையில் இரவு தோட்டத்தில் மது அருந்தி கொண்டிருந்தவர் திடீரென மாயாமானார். இது குறித்து சிவக்குமாரின் அக்கா திலகவதி குடிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட குடிமங்கலம் காவல்துறையினர் அங்கிருந்த கினறு அருகே உள்ள ரத்தகறை தடயங்களை வைத்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் கினற்றில் தேடிபார்த்து அங்கிருந்த சிவக்குமாரின் சடலத்தை மீட்டனர்.
இதனிடையே புகாரளித்த தாய் மற்றும் அக்காவின் மேல் சந்தேகம் வர தீவிரமாக விசாரித்ததில் சிவக்குமார் தினமும் மது அருந்தி தாயாரை தகாத வார்த்தைகளில் பேசிவந்ததாலும் ஊதரிதனமாக செலவு செய்து வந்ததாகவும் அதனால் தனது கணவருக்கு தெரிந்தவர்களான இருவரை வரவழைத்து சிவக்குமாரை கொலை செய்து கினற்றில் வீசியதை ஒப்புகொண்டர்.
இதனை தொடர்ந்து திலகதி அவரதுகணவர் மூர்த்தி ஜீவானந்தம் மாயாண்டி சிவக்குமாரின் அம்மா பொன்னுதாயி உட்பட 5 பேரை குடிமங்கலம் போலீசார் கைது செய்தனர்..
மகனை கொன்றுவிட்டு நாடகமாடிய வழக்கில் சகோதரியும் வயாதான தாயாரும் கைது செய்யபட்டது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..