கொடியேற்றத்துடன் துவங்கிய பூலாம்பாடி கோவில் திருவிழா..!
பிரசித்தி பெற்ற பூலாம்பாடி ஸ்ரீ தர்மராஜா ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழாற்கான கொடியேற்றம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதர்மராஜா ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயம். பிரசித்த பெற்ற இவ்ஆலயத்தில் தீமிதி திருவிழா மற்றும் ஊரணி பொங்கல் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது.
கோ பூஜையும் தொடர்ந்து கொடியேற்றத்திற்கான யாக வேள்வி பூஜை கணபதி வழிபாட்டோடு தொடங்கியது. மஹா பூர்ணாஹுதி பூஜையும் இதனையடுத்து தீபாராதனை நடைபெற்றது.
மேலும் கொடிமரத்திற்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவிய உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு கொடி யேற்றப்பட்டது.
விழாவில் ஜூலை 14ம் தேதி தீமிதி திருவிழாவும்,
ஜூலை 15ம் தேதி ஊரணி பொங்கல் விழாவும் நடைபெற உள்ளது. கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
-பவானி கார்த்திக்