அதிகரிக்கும் உயிரிழப்பு..! மின்வாரிய துறை ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கை..!
சென்னை தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலக நுழைவாயில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர், தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 55 ஆயிரத்திற்கும் அதிகமான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். த
மிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே மூன்று பிரிவுகளாக செயல்பட்டு வரக்கூடிய நிலையில், அவற்றை மேலும் பல பிரிவுகளாக பிரிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியான மின் ஊழியர்களை பணி அமர்த்தினால் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மட்டுமே பணியமத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதியை அமல்படுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முழக்கங்களையும் எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன்,
தமிழ்நாடு மின்சார வாரியம் முழுக்க முழுக்க தனியார் மையத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழக மின்சார வாரிய ஊழியர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தால் மின்சார வாரியம் சார்ந்த பணிகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று, மின் ஊழியர்களின் பற்றாக்குறையால் சுமார் மூன்று கோடி மின் இணைப்புகள் உரிய நேரத்துக்குள் முறையாக பராமரிக்கப்பட முடியாத ஒரு சூழல் இருக்கிறது.
மின்துறை ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தங்களின் போராட்டம் பல்வேறு வகையில் தொடரும் என்றும் தெரிவித்தார். தமிழக மின் துறையில் இருக்கும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான காலி பணியிடங்களால், தற்போதைய தொழிலாளர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டு உயிரிழப்புகள் போன்ற அசப்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே தமிழக அரசு இதுகுறித்து விரைந்து நடடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..