ஆயுள் தண்டனை கைதிகள் மனு..!! ஆளுநர் நிராகரிப்பு..!! உயர்நீதிமன்றம் அதிருப்தி..!!
ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பின், தகுந்த காரணங்கள் இல்லாமல் தமிழ்நாடு ஆளுநர் நிராகரித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பாளையக்கோட்டை சிறையில் உள்ள சங்கர், கோவை சிறையில் உள்ள வேலுமணி உள்ளிட்ட 10 ஆயுள் தண்டனை கைதிகள் சார்பில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை சரிபார்த்து அதற்கான ஆதரங்கள் இல்லாத நிலையில் நன்னடத்தை கொண்டு ஆயுள் கைதிகளை விடுதலை செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவை பரிந்துரைத்த பின்னரே முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கான அனுமதியை வழங்கினார். ஆனால், ஆளுநர் அதற்கு சரியான காரணம் அளிக்காமல் முன்கூட்டியே விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்து வருவதாக ஆயுள்தண்டனை கைதிகள் மனு அளித்திருந்தனர். அதே சமயம் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த வழக்கு குறித்த மனுவில், நன்நடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய முதலமைச்சர் அனுமதி வழங்கி தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் ஆளுநர் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு ஒப்புதல் வழங்காமல் நிராகரித்து விட்டதாகவும் சுட்டிகாட்டியுள்ளனர்.
இந்த வழக்குகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சிவஞானம் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அப்போது, ஆயுள் தண்டனை கைதிகளை நன்நடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக மாநில அளவிலான குழு பரிந்துரையின் அடிப்படையில், முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பின்பும் தகுந்த காரணங்களை கூறாமல் தமிழ்நாடு ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும் என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பான கோப்புகளை மீண்டும் தமிழ்நாடு அரசு 8 வாரத்திற்குள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..