வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் மறைவு..!! தலைவர்கள் இரங்கல்..!!
வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயாலளர் வைகோ எம்.பி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவின் காரணமாக வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை அன்று காலமானர்.., அவரின் மறைவையொட்டி நேற்று ஒருநாள் முழுவதும் சென்னையில் வணிக வியாபாரிகள் கடைகளை அடைத்து தங்களது இரங்கலை தெரிவித்தனர்..
த.வெள்ளையன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தியாக குறிப்பிட்டுள்ளார்..
வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்த அனைவருக்கும் தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
த.வெள்ளையன் மறைவிற்கு மதிமுக பொதுச்செயாலளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ் பாதுகாப்பு தளத்திலும், தமிழீழ விடுதலைக்காக குரல் கொடுப்பதிலும், தூத்துக்குடியில் நாசகார நச்சு ஆலையான ஸ்டெர்லைட்டை எதிர்த்து தம்மோடு போராடியதிலும், தமிழீழ விடுதலைக்காக முத்துக்குமார் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்.. இறுதி நிகழ்ச்சிகளை முனைப்போடு செய்ததிலும் வெள்ளையன் அவர்களின் பணிகள் பாராட்டத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்..
த.வெள்ளையன் பிரிவால் துயரத்தில் இருக்கும் புகழேந்தி தங்கராஜ் அவர்களுக்கும், வெள்ளையன் அவர்களின் குடும்பத்தினருக்கும், வணிகர் சங்கத்தினருக்கும் மதிமுக சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் வைகோ குறிப்பிட்டுள்ளார்..
இதேபொல் த.வெள்ளையன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்., இவரின் மறைவையொட்டி இன்று ஒரு நாள் முழுவதும் வணிகர்கள் கடையை அடைத்து தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..