உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் உடனே வெளியேற வேண்டும் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர தாக்குதலை தொடங்கியது. கடந்த 12 நாட்களுக்கு மேலாக தீவிர தாக்குதல்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியது.
கடந்த 2 நாட்களாக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக ரஷ்யா நிறுத்தியுள்ளது. அதன்படி, கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற, மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்ததாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் ரயில் உள்ளிட்ட எதாவது, ஒரு போக்குவரத்து சேவையை பயன்படுத்தி உடனே வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுத்தியுள்ளது.