மாணவர்களின் செய்கையால் அச்சறுத்தலுக்கு ஆளான மக்கள்..!!
மயிலாடுதுறை மாவட்டம் மேலபாண்டூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. 63 ஆண்டுகள் பழமை வாய்ந்தது . தற்போது 10 ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் பள்ளி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு மேற்புற காரைகள் கை வைத்தவுடன் பெயர்ந்து விழும் அளவிற்கு மிக மோசமான நிலையில் கட்டிடம் உள்ளது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் சமீபத்தில் மேற்புற காரை பெயர்ந்து விழுந்து மாணவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசு சான்றிதழ் பெற்று 30 வருடங்களுக்கு மேல் ஆன நிலையில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்கூட்டியே மாணவர்களை தற்காலிகமாக வேறு பகுதிக்கு மாற்றி கட்டிடத்தை இடித்து தரம் உயர்த்தப்பட்ட புதிய பள்ளி கட்டிடமாக கட்டித் தர வேண்டும் என முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், புளியங்கண்ணு கிராம பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயத்தில் 21 ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு ராகு கேது பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாககன்னி அம்மனுக்கு 200க்கும் மேற்பட்ட அப்பகுதி கிராம பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்தபடியும் வாயில் அலகுகளை குத்திய படி மேளதாளம் முழங்க பக்தியுடன் ஊர்வலமாக ஆலயத்திற்கு வருகை தந்து 11 அடி உயரம் கொண்ட ஸ்ரீ நாககன்னி அம்மனுக்கு வேத மந்திரங்கள் முழங்க பாலபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ நாககன்னி அம்மனை வணங்கி அருளாசி பெற்று சென்றனர்
ராணிப்பேட்டைமாவட்டம்,வாலாஜா பகுதியில் இருந்து அம்மூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி கால்களை சாலையில் தேய்த்தபடி சாலை பயணிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பயணம் செய்த செயல் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது மேலும் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை கூட பொருட்படுத்தாமல் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்தை தொடர்ந்து இயக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் பள்ளி கல்லூரிகளில் போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையிலும் சில மாணவர்கள் அதனை பொருட்படுத்தாமல் ஆபத்தான முறையில் சாகசம் செய்வதாக எண்ணிக்கொண்டு பயணம் செய்வது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வாணியம்பாடி பகுதிகளில் விவசாயிகள் மானாவரி பயிரான வேர்க்கடலை பயிர் செய்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக பருவமழையும் பெய்யாமல் வேர்க்கடலை பயிர் வாடி வந்த நிலையில் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக மாலை நேரங்களில் ஆம்பூர் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் பெய்து வரும் கனமழையால் ஆம்பூர் நகராட்சி எதிரில் உள்ள சாலை மற்றும் நேதாஜி சாலை, உமர்சாலை ஆகிய முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மழை நீரில் நீந்தியபடி செல்கின்றனர்.தற்போது பெய்து வரும் கனமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய தொழிற்சங்க மையம் சார்பில், அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தை கண்டித்தும்நடைபாதை கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் கண்டன போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரங்கள் முன்பு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகஅமைந்துள்ள, பூ, மாலை, தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் தரைக்கடைகளை அகற்றுவதை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம்கைவிட வேண்டும், தினசரி வரி நிர்ணயித்து வசூலித்திட வேண்டும், என்பதுஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சங்கம் சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் வே. சங்கர் சிஐடியு நிர்வாகிகள் கே.காங்கேயன், இரா.பாரி, எஸ். முரளி, மாவட்ட நிர்வாகிகள் எம். வீரபத்திரன், அ.சேகர், சரவணன், கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..