ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..!! பாஜக நிர்வாகியிடம் நடத்தப்பட்ட விசாரணை.!! 21பேர் சொத்துக்கள் முடக்கம்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் 15 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.., அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது..
இந்த கொலை தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பென்னை பாலு உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 15 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.., அதில் 11 ஆவது குற்றவாளியாக சரணடைந்த திருவேங்கடம் மாதவரம் பகுதியில் ஆயுதங்களை எடுத்து கொடுப்பதற்காக அழைத்து சென்ற போது காவல்துறையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
அதன் பின் காவல்துறை உயர் அதிகாரிகள் 6 பேரிடம் போலீஸ் காவலில் எடுத்து தொடர் விசாரணை செய்ய வேண்டி கோர்ட்டில் மனு அளித்திருந்தனர்.., அந்த மனுவை ஏற்ற நீதிபதி 6 பேரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்ய உத்தரவிட்டிருந்தார்.. அந்த உத்தரவின் பேரில் குற்றவாளி அருள் கொடுத்த தகவலின் படி.., காங்கிரஸ் கட்சியின் இளைஞர் மாநில முதன்மை செயலாளர் அஸ்வத்தமானை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்..
அதனை டிகோடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு ஆஜரான பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜிடம் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. போலீசார் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து பால் கனகராஜிடம் விசாரணை நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்ந்து பல்வேறு குற்றவாளிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில்., கைதானவர்களின் சொத்துக்களை முடக்கம் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..