வளர்ப்பு நாய்களை கொன்று புதைத்த நபர்கள்.. காரணம் என்ன?
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தெரு நாய் மற்றும் தனது சொந்த வளர்ப்பு நாயை ஆடுகளை கடித்து கொதறியதால் ஊர் பொதுமக்கள் உடன் சேர்ந்து கொன்ற நான்கு பேர் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு புகார் கொடுத்தவர் மீது கொலைவெறி தாக்குதல்- தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை. காவல்துறையினர் விசாரணை.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் அடுத்த முளையாம்பூண்டி கோவில்-மேட்டு புதூர் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு நாய்களை மரத்தில் கட்டி அடித்த சம்பவத்தால் நாய்கள் இறந்த நிலையில் நாகராஜ் என்பவர் மூலனூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில் வாயிலா ஜீவன்களை அடித்து துன்புறுத்திக் கொன்றது பேரில் நடராஜ், பாலசுப்பிரமணியம், பன்னீர் கந்தசாமி உள்ளிட்ட ஊர் பொதுமக்களுடன் சேர்ந்து நாயை துன்புறுத்தி கொண்டதாக புகார் மனு அளித்துள்ளார். மூலனூர் காவல்துறையினர் நான்கு பேர் மற்றும் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக புகார் அளித்த நாகராஜ் மீது சில நபர்கள் பின் துரத்தி வந்ததாகவும் இன்று காலை அவரை யாரோ தள்ளி விட்டதாகவும் கோரி அப்பகுதியில் கீழே விழுந்து மூலனூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்பு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் பிராணிகளின் தடிப்பு பிரிவு சமூக ஆர்வலாக வேலை செய்து வரும் நான் நேற்று முன்தினம் மோகனூர் பகுதிகள் நாய்களை கொன்றதாக தகவல் வந்த பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போது நாய்களை கொன்று புதைத்து விட்டனர்.
அதை மீண்டும் தோண்டி எடுத்து வெட்னரி மருத்துவர்களை வைத்து ஆய்வு செய்தபோது கொன்றது உறுதியான நிலையில் காவல்துறையிடம் புகார் அளித்தேன். இருந்தும் என்னை அப்பகுதி மக்கள் பின் தொடர்ந்து வந்ததாக காவல்துறையுடன் புகார் அளித்தேன்.
நேற்று எந்த வித நடைபெறாளர்கள் இன்று காலை எனது ஊர் வெள்ளகோவில் இருந்து மூலனூர் வரும் மலையில் யாரோ பின்னாடி தாக்கியது போல் உணர்ந்தேன் அதைத்தொடர்ந்து பக்கத்தில் உள்ள குழியில் விழுந்ததால் சுருதி காயம் ஏற்பட்டு மறக்க முடியாத அனுமதிக்கப்பட்டுள்ளேன்.
பலியிடுபவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் நான் தெரு நாய்கள் தனது 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மதிப்புள்ள உள்ள ஆடுகளை கடித்துக் கொன்றதால் நாய்களை அடித்ததாக அப்பகுதி பொதுமக்களும் தெரிவித்து வருகின்றனர்.
நாய்களைக் கொன்றவர் மீது புகார் கொடுத்ததால் தாக்கப்பட்டதாக கூறி புகார் கொடுத்தவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.