குஷ்பூவிற்கு எதிராக திரும்பிய மக்கள்..!! பரபரப்பான சென்னை..!!
தமிழக அரசின் நலத்திட்டகங்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய தென்னிந்திய நடிகையும் பாஜக மகளிர் அணியின் உறுப்பினருமான குஷ்பூவின் உருவ பொம்மையை எரித்து திமுக மகளிர் அணியினர் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜகவை சேர்ந்தவருமான நடிகை குஷ்பு இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் உழைக்கும் மக்கள் டாஸ்மாக்கில் செலவழிக்கும் பணத்தை சேமிக்க நமது பெண்களுக்கு உதவ வேண்டும் என்றும், தமிழக அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் பணத்தை விட குடிகாரர்களால் பெண்கள் படும் வேதனையின் அளவு அதிகம் என பேசி இருந்தார்.
இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை குறித்து அவதூறாக பேசிய குஷ்புவை கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. மணிக்கூண்டு அருகே நடைபெற்ற போராட்டத்தின் போது குஷ்புவின் உருவப் படத்தை தீயிட்டுக் கொழுத்தி, பின்னர் செருப்பால் அடித்து எரித்தனர். அப்போது குஷ்பூ எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..