தடம் புரளும் ரயில்கள் அச்சத்தில் பயணிக்க மறுக்கும் மக்கள்..!!
ஒடிசா கோர ரயில் விபத்தை தொடர்ந்து கடந்த சில தினங்களாக பல ரயில்கள் ஆங்காங்கே தடம் புரண்ட செய்திகள் பார்த்து வருகிறோம். இந்த சம்பவம் போன்றே நேற்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.
நேற்று காலை 9மணிக்கு புறப்பட்ட அரக்கோணம் விரைவு ரயில் சில தூரம் சென்றதும் நின்றுள்ளது. சரி சிக்கனலிற்காக தான் இரயில் நின்று கொண்டு இருக்கிறது என பயணிகள் அனைவரும் நினைத்து கொண்டிருந்துள்ளனர்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும், இரயில் இயக்கப்படாததால், சில ஆண் பயணிகள் இரயில் பெட்டியில் இருந்து குதித்து, இரயில் இன்ஜினியரிடம் விசாரணை செய்துள்ளனர். அப்பொழுது தான் இரயில் பாதை சரியில்லாமல் இதற்கு முன் சென்ற திருவள்ளூர் ரயில் பேஷன் பிரிட்ஜ் அருகே தடம் புறண்டுள்ளது என தெரியவந்துள்ளது.
சில மணி நேரத்திற்கு பிறகு பாதைகள் மாற்றி விடப்பட்டு, பயணிகள் இரயில் புறப்பட்டது. இதுகுறித்து சக பயணிகளிடம் விசாரித்த போது, இரயிலில் பயணம் செய்வதற்கே மிக பயமாக இருக்கிறது. முதல் ரயில் தடம் புரண்ட சம்பவம் நடந்த பொழுதே சரியான நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால்.
இன்று மற்ற ரயில்கள் இப்படி தடம் புரள வேண்டிய அவசியம் இல்லை. பணம் இருப்பவர்கள் காரில் சென்று கொள்வார்கள், பணம் இல்லாதவர்கள் எப்படி வெகுதூர பயணம் செல்ல முடியும். பேருந்தில் செல்லலாம் என்றால் கூட , ரயில் செல்லும் ஒரு சில ஊர்களுக்கு பேருந்து வசதி கிடையாது..
மக்கள் உயிரை கருத்தில் கொண்டு, தமிழகஅரசு தான், இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Discussion about this post