“அசன்மௌலானா MLA மீது தொடர் குற்றச்சாட்டு” சபாநாயகரிடம் மனு அளித்த கொடுங்கையூர் மக்கள்..!!
சென்னை வேளச்சேரி தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் MLA-வாக இருக்கும் அசன் மௌலானா. இவர் கொடுங்கையூர் கிருஷ்ண மூர்த்தி நகர் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான பொது வழிப்பாதையை ஆக்கிரமைப்பு செய்து சுவர் எழுப்பியுள்ளார்.. இதனால் அப்பகுதி மக்கள் அவ்வழியாக செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்லமுடியாமல் தவிப்பதாகவும் அப்பகுதிமக்கள் குற்றச்சாட்டு அளித்துள்ளனர். இதுகுறித்து பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் மாநகராட்சி அதிகாரிகளுடன் சுவரை இடிக்க சென்றுள்ளனர்.. அப்போது தன்னுடைய ஆதரவாளர்களுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த அசன் மௌலானா, பொதுமக்களை விரட்டியடித்துள்ளார்.. மேலும் நிர்வாகிகளுக்கும் மக்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால், மாநகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளனர். அதன் பின்னர் நிலம் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தில் லாரிகளில் கட்ட கழிவுகளை கொண்டு வந்து கொட்டி மாநகராட்சியினர் தொடர்ச்சியாக பணிகளை செய்ய முடியாதபடி மௌலானா தடைகளை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த சூழலில் எம்.எல்.ஏ அசன் மௌலானாவை சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கொடுங்கையூர் மக்கள் சபாநாயர் அப்பாவுவிடம் புகார் மனு அளித்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..