ஒரு ஊருக்காய்க்கு அபராதம்..! விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
விழுப்புரத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே செயல்படும் பாலமுருகன் உணவகத்தில் 2022ம் ஆண்டு ஆரோக்கிய சாமி என்பவர் 25 சைவ சாப்பாடு பார்சல் வாங்கியுள்ளார்.
மொத்தமாக வாங்கிச் சென்றதால் வீடு சென்ற பார்த்தபோது அதில் ஊறுகாய் வைக்கப்படவில்லை என்பதை அறிந்து ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.
ஹோட்டல் நிர்வாகவும் அதற்கு உரிய பதிலளித்து அவருக்கு சிறிய அளவிலான இழப்பீடை கொடுக்காமல் திருப்பி அனுப்பிவிட்டது. இதன் பின்னர் கடும் மன உளைச்சலுக்குள்ளான ஆரோக்கியசாமி ‘பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்கப்படவில்லை, ஹோட்டலில் கேட்டால் உரிய பதில் இல்லை”.., எனவே தான் மன உளைச்சலுக்கு உள்ளானதாக நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் சதீஷ்குமார் தீர்ப்பு கூறினார்.
அத்தீர்ப்பில் ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.30,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.5,000 மற்றும் ஊறுகாய் பொட்டலம் 25-க்குரிய தொகை ரூ.25/-ம் தொகைக்குரிய ஒரிஜினல் ரசீதும் தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் அபராத தொகையாக செலுத்த வேண்டும். தவறினால் மாதம் ஒன்றுக்கு 9 சதவிகிதம் வட்டியுடன் பணம் செலுத்த வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
-பவானி கார்த்திக்