செங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாததால் நோயாளிகள் வேதனை
செங்கம் அரசு பொது மருத்துவமனையில் 13 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய மருத்துவமனையில் தற்போது 6 மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருவதால் அவசர மற்றும் விபத்து சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்
அரசு மருத்துவமனையில் சுமார் 38 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு திறக்கப்பட்ட நிலையில் போதுமான மருத்துவர்கள் இல்லாததால் இன்று பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவி விபத்து ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட மாணவி ஒரு மணிநேரமாக காத்திருந்தும் மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை பெற முடியாத சூழல் ஏற்பட்டது
விளம்பர தி.மு.க ஆட்சியில் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் உள்ளதாக கூறிவரும் சுகாதாரத் துறை அமைச்சர் செங்கம் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பாரா என செங்கம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Discussion about this post