ராணிப்பேட்டை வாலாஜாவில் 10 கோடி ரூபாய் ஊழல்..!!
வாலாஜா அருகே 10 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வட்டாட்சியரிடம் ஒன்று திரண்டு கோரிக்கை மனு வழங்கிய கிராம மக்கள்
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த தென் கடப்பந்தாங்கல் பகுதியில் சர்வே எண் 213 -யில், அரசுக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் 23 சென்ட் இடத்தினை தனி நபர் ஒருவர் போலி ஆவணங்கள் கொண்டு ஆக்கிரமிப்பு செய்ய, முயற்சி செய்து வருவதாக புகார் ஒன்று எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலி ஆவணங்களை கொண்டு அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்தபோது ராணிப்பேட்டை கோட்டாட்சியரிடம் இது சம்பந்தமாக புகார் மனு வழங்கி அதன் மூலம் விசாரணை மேற்கொள்ளப் பட்டது.
சில போலி ஆவணம் கொண்டு ஆக்கிரமிப்பு செய்யும் பணி தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தற்போது மீண்டும் அவ்விடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் பணியில் அந்த தனிநபர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அந்த வட்டாரத்தில் மீண்டும் ஒரு புகார் எழுந்துள்ளது.
அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்யும் நபரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு இடத்தினை அரசே எடுத்து பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என தெரிவித்து தென்கடப்பந்தங்கள் ஊராட்சி கிராம மக்கள் வாலாஜாப்பேட்டை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவினை வழங்கினார்கள்..
மேலும் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் மனுவின் மீது உரிய விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் கிராம பொதுமக்களுக்கு உறுதி அளித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..